சர்வதேச அரசியலிலும் தமிழ் தரப்புக்கு தோல்வியா ?

Published By: Digital Desk 2

02 Mar, 2021 | 02:15 PM
image

( சி.அ.யோதிலிங்கம் )

ஐ.நா. மனித உரிமைகள்பேரவையில் ஆறு நாடுகள் கூட்டாக 46ஃ1 என்ற பெயரில் புதிய பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளன. அந்தப்பிரேரணையை “புதிய மொந்தையில் பழையகள்” என்பதை விட “புதிய மொந்தையில் பல நாள் புளிச்சகள் எனலாம்” தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் எவையும் அதில் உள்ளடக்கப்படவில்லை. தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களும் பிரேரணைக்கும் இடையில் பெரிய இடைவெளி காணப்படுகின்றது. முன்னைய பிரேரணைகளை விடமி கப் பலவீனமான பிரேரணையாக இது உள்ளது.          

புதிய பிரேரணையில் குறிப்பிடத்தக்கதாக எதுவும்இல்லை. வலுவான அழுத்தங்களும் இல்லை.15 அவதானிப்புக்களும் 16 பரிந்துரைகளும் அதில் உள்ளன.  பரிந்துரைகளில் நல்லாட்சிக்காலம் புகழப்பட்டுள்ளது. காணாமல் போனோர் அலுவலகம்,இழப்பீடுகளுக்கான அலுவலகம் மேற்கொண்ட முன்னேற்றங்கள் பாராட்டப்பட்டுள்ளன. இந்த முன்னேற்றங்கள் அவர்களின் கண்களில் படுவதற்கும் விசேட நுணுக்குக்காட்டிகள் அவர்களிடம்இருக்கின்றது என கருதவேண்டியுள்ளது. 

அரசாங்கத்தினதும்  புலிகளினதும் மனித உரிமை மீறல்களை ஆராய்வதற்கு பரந்துபட்ட பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு தொடர்ச்சியாக தண்டனை வழங்கப்படாத நிலமை நீடிக்கின்றது எனவும் கூறப்பட்டுள்ளது. இவற்றைவிட முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்தல், மனித உரிமை ஆணைக்குழுவை சுயாதீனமாகச் செயற்பட விடுதல், காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு பணிகயம் என்பவற்றை சுயாதீனமாக செயற்பட விடுதல், பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்தல், மதச்சுதந்திரம், பன்மைத்துவம் என்பவற்றை ஊக்குவித்தல், இலங்கையின் நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்தல் என்பன உள்ளடங்கியிருக்கின்றன.  

 அதேவேளை 15 பரிந்துரைகளில் அவதானிப்புக்களும் கூறப்பட்டுள்ளன. எவையெல்லாம் இராஜதந்திர பாராட்டுக்களே. தமிழ் மக்கள் மகிழ்ச்சிப்படத்தக்கதாக எதுவுமில்லை. தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்ற விவகாரங்களில் பெரிய கவனம் செலுத்தப்படவில்லை.இலங்கை முழுவதற்குமான மனித உரிமை விவகாரங்களிலேயே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இங்கும் கூட தமிழ் மக்கள் மனித உரிமை விவகாரங்களுக்கும்,கட்டமைப்பு சார் இன அழிப்பு விவகாரங்களுக்கும் அண்மைக்காலமாக கடுமையாக முகம் கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக சிங்களக் குடியேற்றங்கள், தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புக்கள், படையினரின் காணிப்பறிப்பு, அரசியல் கைதிகளின் விவகாரம்என்பன பற்றி எதுவும் கூறப்படவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-02-28#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04