இலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டம் இன்று

Published By: Vishnu

02 Mar, 2021 | 08:04 AM
image

இலங்கை விமானப்படை தனது கீர்த்திமிகு 70 ஆவது ஆண்டு நிறைவினை இன்றைய தினம் கொண்டாடுகின்றது.

இதனை முன்னிட்டு இன்று கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தில் பிரதான மரியாதை அணிவகுப்பை தொடர்ந்து கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் கொழும்பு, கட்டுநாயக்க உட்பட நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விமானப் படை முகாம்களிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம் விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடும் முகமாகவும் இலங்கை விமானப்படையின் ஐந்தாம் இலக்க தாக்குதல் அணி மற்றும் ஆறாம் இலக்க ஹெலிகொப்டர் அணியினருக்கான ஜனாதிபதி வர்ண விருதுகளை வழங்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை முன்னிட்டு மார்ச்  03 முதல் 05 ஆம் திகதி வரையில் காலிமுகத்திடலில்   முதற்தடவையாக பாரியளவிலான வான் சாகச கண்காட்சி ஒன்றும் அதேபோல வேகமாக பறத்தல் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் கூட்டொருமைப்பாட்டின் சமிக்ஞையாகவும் இராணுவ ரீதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் தோழமையை குறிப்பிடும் முகமாக சரங் (அதிநவீன இலகுரக ஹெலிகொப்டர்), சூர்ய கிரண் (Hawks),  தேஜாஸ் தாக்குதல் விமானம்,  தேஜாஸ் பயிற்சி மற்றும் டோனியர் சமுத்திர ரோந்து விமானம் ஆகியவற்றுடன் இந்திய விமானப் படையினரும் இந்திய கடற்படையினரும்  இந்த நிகழ்வுகளில் இணைந்து கொள்கின்றனர். இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப் படையினரின் 23 விமானங்கள் இந்த பாரிய நிகழ்வில் பங்கேற்க உள்ளன.

இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக இந்திய விமானப்படை மற்றும் கடற்படை விமானங்கள் 2021 பெப்ரவரி 27 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்துள்ளன. 

பல வகையிலான தயாரிப்புக்களும் பாரிய எண்ணிக்கையிலான விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டிருப்பது இந்திய மற்றும் இலங்கை படையினரிடையிலான நட்பு மற்றும் பகிரப்பட்ட இயங்குதிறன் அதேபோல வலுவான பிணைப்புக்களையும் எடுத்தியம்புகின்றது.

இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கும் சகல இந்திய விமானங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதேநேரம் இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் சுதேச தொழில்நுட்ப வலிமை மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் தயாரிப்புகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைகிறது. தேஜாஸ் பயிற்சி விமானம் முதற்தடவையாக இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதுடன் இலங்கை விமானப்படையின் விமானிகள் இந்திய விமானிகளுடன் இணைந்து சுதந்திரமான பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக அமைகின்றது. அதே நேரம் இந்த நிகழ்வுகளின்போது   சகல சுகாதார நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படும்.

இதேவேளை, 22 ஆவது தடவையாக இடம்பெறம் விமானப்படை வருடாந்த சைக்கிள் ஓட்டப் போட்டி -2021 தொடர், மார்ச் 07ம் திகதி நடைபெறவுள்ளவுள்ளதுடன் விமானப்படை தளபதி ரக்பி கிண்ண போட்டிகள் மார்ச் 20-21 மற்றும் 26-27 திகதிகளில் இடம்பெறவுள்ளது.

அத்தோடு 70 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விமானப்படை அதிகாரிகள் 467 பேரும் , ஏனைய 7290 விமானப்படையினருக்கும் பதவி உயர்வு வழங்பட்டுள்ளது. 

1951 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி 6 அதிகாரிகள் , 21 வீரர்களுடன்  இலங்கை விமானப்படை ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47