கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்யும் வழிகாட்டல்களை விரைவில் வெளியிடுங்கள் - சர்வதேச மன்னிப்புச் சபை

02 Mar, 2021 | 06:57 AM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு வரவேற்புத் தெரிவித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, அதன்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்களை விரைந்து வெளியிடுமாறும் வலியுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் கூறியிருப்பதாவது:

சடலங்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை வழங்குவது வெகுவாகக் காலந்தாழ்த்தப்பட்டிருந்தாலும், தற்போது அதற்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். 

முஸ்லிம் சமூகத்தினரின் மதரீதியான நம்பிக்கையையும் உரிமையையும் மறுக்கும் வகையில் கட்டாயத்தகனத்தை நடைமுறைப்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.

எனவே சிறுபான்மையினமான முஸ்லிம் சமூகத்தினரின் மத ரீதியான உரிமையைப் புறக்கணிக்கின்றதும் விஞ்ஞான ரீதியில் எவ்விதத்திலும் நிரூபிக்கப்படாததுமான ஒரு தீர்மானம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளமை உண்மையில் வரவேற்கத்தக்கதாகும். 

கட்டாயத்தகனம் தொடர்பான தீர்மானத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்களுக்குத் தற்போதைய தீர்மானம் ஆறுதலை அளித்திருக்கும்.

எனினும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டல்களை வெளியிடுவதில் தாமதம் காண்பிக்கப்பட்டுவரும் நிலையில், அதனை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் சிறுபான்மையின முஸ்லிம்களைப் புறந்தள்ளும் வகையிலான எவ்வித நடவடிக்கைகளும் இனியும் மேற்கொள்ளப்படக்கூடாது என்றும் வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37