உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை வெளிப்படுத்த வேண்டும் - திஸ்ஸ விதாரண

Published By: Digital Desk 4

01 Mar, 2021 | 10:34 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் உண்மையான குற்றவாளிகள் மறைக்கப்பட்டுள்ளன.

அதனால் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்து தாக்குதலின் சூத்திரதாரிகளை வெளிப்படுத்தவேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

கொவிட் சடலங்களில் இருக்கும் வைரஸ் உயிரற்றவை - திஸ்ஸ விதாரண | Virakesari.lk

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டா்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை திருப்தியளிப்பதாக இல்லை.

தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் போன்ற விடயங்களை கண்டறிந்து, இதுபோன்ற தாக்குதல் ஒன்று எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுப்பதே ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் நோக்கமாகும். 

ஆனால் வெளியிடப்பட்டிருக்கும் ஆணைக்குழுவின் அறிக்கையில் அதுதொடர்பான எந்த வெளிப்படுத்தலும் இல்லை.

குண்டை வெடிக்கச்செய்தவர்கள், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் தொடர்பில் மக்களுக்கு தெரியும். இதன் பிரதான சூத்திரதாரிகள் இனம் காணப்படாதவரை எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல் ஒன்று இடம்பெறலாம். 

அதனை தடுக்கவே விசாரணைக்குழு அமைத்து உண்மை குற்றவாளிகளை இனம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் விசாரணை அறிக்கையில் உண்மையான குற்றவாளிகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை குழு அமைத்து உண்மையான குற்றவாளிகளை வெளிப்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம்.

ஆனால் இந்த அறிக்கையை பார்க்கும்போது ஏமாற்றமடைந்துள்ளோம். அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளால் நாங்களும் விரக்தியடைந்திருக்கின்றோம்.

எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைய எங்களால் திருப்தியடையக்கூடியதாக இல்லை. அதனால் ஜனாதிபதி செயலாணி ஒன்றை அமைத்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52