மனநல வைத்தியரான வடிவேல்

Published By: Raam

12 Aug, 2016 | 04:58 PM
image

வைகைப்புயல் வடிவேலு கதாநாயகனாக நடத்து வெளிவந்த எலி படத்திற்கு பின் மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் கத்தி சண்டை படத்தில் நடித்து வருகின்றார்.

சுராஜ் இயக்குத்தில் விஷால் கதாநாயகனானவும், கதாநாயகியாக தமன்னா நடிக்கும்கத்தி சண்டையில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு மற்றும் சூரி நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெகபதி பாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோரும் நடிக்கின்றனர். ‘எலிபடத்தில் கதாநாயகனாக நடித்ததை தொடர்ந்து மீண்டும் இப்படத்தின் மூலம்  நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க களமிறங்கியுள்ள வடிவேலு, இப்படத்தில் தீவிரமான ஒரு மனநல வைத்தியராக நடிக்கிறார். இவரது  கதாபாத்திரத்தின்  பெயர்டாக்டர் பூத்ரிஎன்பதாகும்.

இப்படம் குறித்து இயக்குனர் சுராஜ் கூறும்போது,

‘‘விஷால் நடித்த படங்களிலேயே இந்த படம் அதிக பொருட் செலவில் தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல் காட்சிகளுக்காகவும், சண்டை காட்சிகளுக்காகவும் கலை இயக்குனர் உமேஷ் குமார் கைவண்ணத்தில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. முதல் பாதியில் சூரியும் இரண்டாம் பாதியில் வடிவேலுவும் நகைச்சுவையில் கலக்குவார்கள். இப்படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது’’ என்றார்.

இப்படத்திற்கு  ஹிப் பாப் தமிழா ஆதி  இசையமைக்கின்றார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார், ‘ஹிப் பாப் தமிழாஆதி எழுதுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37