பொலிஸார் மக்களிடம் வேண்டுகோள் ! தொலைக்காட்சி, வானொலிகளை சத்தமாக ஒலிக்க வைக்க வேண்டாம்

Published By: Digital Desk 4

01 Mar, 2021 | 04:49 PM
image

(எம்.மனோசித்ரா)

வானொலி மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்டவற்றை அதிக சத்தமாக கேட்பதால் அல்லது பார்ப்பதால் இரவு வேளைகளில் கற்றலில் ஈடுபடும் மாணவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எனவே இரவு வேளையில் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இரவில் கற்றலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவர்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் அயலவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி அல்லது வானொலி அதிக சத்தத்துடன் பார்க்கப்படுவதாக அல்லது கேட்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எனவே பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் , தமது சூழலுக்கு மாத்திரம் போதுமான சத்தத்தில் இவற்றை பாவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்தால் பொலிஸாரால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50