அரசாங்கம் சர்வதேச நாடுகளின் கட்டளைக்கு அடிபணிந்து செயற்படுகிறது: ஓமல்பே சோபித தேரர்

Published By: J.G.Stephan

01 Mar, 2021 | 11:07 AM
image

(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியும் என அரசாங்கம் எந்நிலைப்பாட்டில்  இருந்து  அறிவித்துள்ளது என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும். சர்வதேச நாடுகளின் கட்டளைக்கு அடிபணிந்து அரசாங்கம் செயற்படுகிறது. உடல்களை புதைப்பதா, அல்லது தகனம் செய்வதா என்ற விடயத்தில் இனங்களுக்கிடையில் தேவையற்ற முரண்பாட்டை அரசாங்கமே தோற்றுவித்தது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை  அரசாங்கம் முழுமையான தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டது. ஒரு நாடு ஒரு சட்டம் என்பதை உறுதியாக பின்பற்றுதாக குறிப்பிட்டவர்கள் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தற்போது கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

தேசப்பற்று, ஒரு நாடு ஒரு சட்டம் ஆகியவை அரசாங்கத்திற்கு வெறும் தேர்தல் கால பிரசாரம் என்பதை பெரும்பான்மை மக்கள் இனியாவது புரிந்துக்கொள்ள வேண்டும். பொதுத்தேர்தலில் அரசாங்கம் பௌத்த சிங்கள மக்களை கவர்வதற்காக ஒரு நாடு ஒரு சட்டம் என்ற விடயத்தை பிரசாரமாக்கி அதில் பயன்பெற்றுக்கொண்டது.

கொவிட்-19 தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின்  உடலை அடக்கம் செய்ய முடியும் என துறைசார் வைத்திய நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பித்தும் அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. உடல்கள் தகனம் செய்யப்படும் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது என்பது உறுதி என்று பலமுறை ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொண்டார்கள். இதனை கொண்டு சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளை அரசாங்கம் தோற்றுவித்தது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால்  உயிரிழப்பவர்களின்  உடலை அடக்கம் செய்ய முடியும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் ஏன் திடீரென எடுக்க வேண்டும். சர்வதேச நாடுகளின் விருப்பத்திற்கு அமைய அரசாங்கம் செயற்படுகிறது. நாட்டின் இறையாண்மை என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள். ஆகவே நாட்டு மக்கள் இனியாவது புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04