கடற்கடைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேயகுணவர்தனவின் சிந்தனைக்கமைவாக கடற்படையின் அதிகாரிகளை கௌரவிக்கும் நோக்கில் நிர்வாக அதிகாரியாக கனிஷ்டநிலை சிப்பாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை கடற்படைத் தளபதி நேற்று வழங்கி வைத்துள்ளார்.

கடற்படையின் நிர்வாகப் பணிகள் மற்றும் பயிற்றுவிப்புகளில் தலைமை தாங்கி செயற்படுவது இந்த நியமனத்தின் இலக்காகும். அதேபோல் அரச நிகழ்வுகளில் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி இவர் கலந்துகொள்ள முடியுமெனவும் கடற்படைத்தலைமையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.