சொகுசு காரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினருக்கு விளக்கமறியல்

Published By: Vishnu

28 Feb, 2021 | 01:05 PM
image

சொகுசு காரில் சென்று போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நேற்றுமுன்தினம் மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் சொகுசுக் காரொன்றை வழிமறித்துச் சோதனையிட்டபோது அக்காரில் பயணம் செய்த இளம் தம்பதியினரிடமிருந்து ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஓட்டமாவடியைச் சேர்ந்த 31 வயதான கணவனிடமிருந்து 160 மில்லி கிராம்  மற்றும் 27 வயதான மனைவியிடமிருந்து 140  மில்லிகிராம் ஹெரோயினை தாம் கைப்பற்றியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்தத் தம்பதியினர் மிகவும் சூட்சுமமான முறையில் பாரிய அளவில் போதைப் பொருள் விநியோகம் மற்றும் வியாபாரத்திலீடுபட்டு வருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சந்தேக நபர்களின் நடமாட்டத்தை அவதானித்து வழிமறித்தாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது சந்தேக நபர்கள் பயணித்த சொகுசுக் காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37