விசேட மருத்துவர்கள் சங்கத்தின் 19ஆவது பொதுச்சபைக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில்

Published By: Robert

12 Aug, 2016 | 02:10 PM
image

இலங்கை சிறுவர்நல விசேட மருத்துவர்கள் சங்கத்தின் 19ஆவது வருட பொதுக்கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது. 

சிறுவர் நோய்களைக் கண்டறிவதற்கும் அந்நோய்களைக் குணப்படுத்துவதற்காகவும் முக்கிய பங்களிப்புகளை வழங்கிய வைத்தியர்களை கௌரவிக்கும் வகையில் பேராசிரியர் ஆசிரி குணவர்த்தனவுக்கும் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வைத்தியர் அமித் குப்தாவுக்கும் வைத்தியர் ஸ்ரீனிகா குலரத்னவுக்கும் ஜனாதிபதியினால் விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கை சிறுவர்நல விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ரம்யா த சில்வா, செயலாளர் வைத்தியர் சுரன்த பெரேரா ஆகியோர் உள்ளிட்ட அச்சங்கத்தின் சுமார் 500 உறுப்பினர்கள் பங்குபற்றினர்.

மேலும் தென்னாசிய ஐக்கிய நாளமில்லா சுரப்பிகள் சங்கமும் இலங்கையின் நாளமில்லா சுரப்பிகள் சங்கமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த நாளமில்லா சுரப்பிகள் விஞ்ஞானத் துறை தொடர் கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது.  

இந்த விஞ்ஞானத் துறை கூட்டத்தொடர் இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹீபால மற்றும் இலங்கை நாளமில்லா சுரப்பிகள் துறை விஞ்ஞான கல்லூரியின் தலைவர் வைத்தியர் உதித புலுகஹபிடிய ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04