தமிழ்நாடு உள்ளிட்ட 5 இந்திய மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் திகதி சட்டப்பேரவை தேர்தல்: அதிகாரபூர்வமான அறிவிப்பு

Published By: J.G.Stephan

27 Feb, 2021 | 05:48 PM
image

தமிழகம், கேரளா, புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து இந்திய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் திகதி முதல் எட்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி என்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2ஆம் திகதியன்று நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் அந்தந்த மாநிலங்களில் தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் அறிவிப்பு குறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது,

தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளுக்கும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிக்கை மார்ச் 13ஆம் திகதியன்று வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 19ஆம் திகதி வேட்புமனு பரிசீலனை 20ஆம் திகதி அன்று நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 22ஆம் திகதியாகும். ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி வாக்குப் பதிவு நடைபெறும். மே 2ஆம் திகதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் ,அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவையின் பதவிக்காலம் எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைகிறது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24ஆம் திகதியும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சட்டப்பேரவை பதவிக்காலம் ஜூன் 8 ஆம் திகதியும் நிறைவடைகிறது.

நடைபெறவிருக்கும் 5 மாநில தேர்தலில் 18 புள்ளி 68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கிறார்கள். அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக மார்ச்சு 27, ஏப்ரல் 1 , ஏப்ரல் 6 ஆகிய திகதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் திகதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தில் மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6, ஏப்ரல் 10, ஏப்ரல் 17, ஏப்ரல் 22, ஏப்ரல் 26, ஏப்ரல் 29 என எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பணியில் ஈடுபடும் நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்கள பணியாளர்களாக சுகாதார அமைச்சகம் அறிவித்திருக்கிறது. இதனால் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்தியாவில் மிகவும் அமைதியான மாநிலங்களில் ஒன்றாக திகழ்ந்தாலும் தேர்தல் செலவின பதற்றமுள்ள மாநிலமாக கருதப்படுகின்றது. வேலூர் மக்களவைத் தொகுதி மற்றும் ஆர்கேநகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலின் போது நிகழ்ந்த செலவின விவரங்களை தேர்தல் ஆணையம் கருத்தில்கொண்டு, தமிழகத்திற்கு மட்டும் தேர்தல் செலவுகளை பார்வையிட இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை இணையதளம் வாயிலாக தாக்கல் செய்யும் வகையில் வசதிகள் செய்து தரப்படும். கொரோனா சூழலை கருத்தில் கொண்டு வாக்குப் பதிவுக்கு ஒரு மணிநேரம் கூடுதலாக அனுமதி அளிக்கப்படுகிறது.

தேர்தல் தருணத்தின் போது வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே இணைந்து பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படும். வாகன பிரச்சாரத்தை பொருத்தவரை வேட்பாளரின் வாகனத்துடன் ஐந்து வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பினால் மட்டும் தபால் முறையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 88 ஆயிரத்து 936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலை விட 34.7 சதவீத வாக்குச்சாவடி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் வசதி இந்த தேர்தலில் நடைமுறைப்படுத்தப்படாது என்றும், இது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47