உலகப் பொருளாதாரத்தில் வர்த்தக பங்கை அதிகரிக்கக் கூடிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும்: தொழில்நுட்ப மாநாட்டில் ஜனாதிபதி

Published By: J.G.Stephan

27 Feb, 2021 | 02:11 PM
image

உலகப் பொருளாதாரத்தில் இலங்கையின் வர்த்தக பங்கை அதிகரிக்க உதவும் வகையில் ஒவ்வொரு துறையிலும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தில் வாக்குறுதியளித்ததைப் போலவே, இந்த நோக்கத்துடன் ஒரு தனி தொழில்நுட்ப அமைச்சை அரசாங்கம் நிறுவியுள்ளது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

விஞ்ஞான, தொழில்நுட்பத்திற்கான அணிசேரா நாடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுகளின் 15 ஆவது ஆளுநர் சபை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் இணையவழியூடாக உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தொழில்நுட்ப அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி ஆணைக்குழு ஏற்பாடு செய்த இந்த மாநாடு கொழும்பு மிலோதா நிதி கற்கைகள் நிறுவனத்தில் இடம்பெற்றது. இணையவழியூடாக 22 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட இவ்வருட மாநாட்டுக்கு இலங்கை தலைமை மற்றும் உபசரிப்பு பொறுப்பை வகிக்கின்றது.

தொழில்நுட்ப அடிப்படையிலான பொருளாதாரம் கொண்ட நாடாக மாற சுதேச தொழில்நுட்பம் நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தினார். சூழல் நட்புடைய  சுதேச  மற்றும் பாரம்பரிய தொழில்நுட்பத்தின் பெருமைமிக்க வரலாறு எங்களிடம் உள்ளது. கொவிட் தொற்றுநோய் நிலைமைகள் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்கும், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கும் சுகாதாரத் துறையில் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திறனை நிரூபிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என ஜனாதிபதி கூறினார்.

இந்த மாநாட்டில் மூன்று தசாப்தங்களின் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன், உறுப்பு நாடுகளுக்கு இடையில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக்கொள்ளவும், அடுத்த பணியகக் கூட்டத்தை 2021 செப்டம்பரில் மொரீஷியஸில் நடத்தவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. உறுப்பு நாடுகளுக்கு இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட அறிவின் அடிப்படையில் எழுதப்பட்ட ஐந்து புத்தகங்களும் வெளியிட்டு வைக்கப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51