ஐஸ் போதைப்பொருள், 15 இலட்சம் ரூபா பணத்துடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 2

27 Feb, 2021 | 03:04 PM
image

( செ.தேன்மொழி )

றாகம பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 15 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்துடன் சந்தேக நபரொருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

றாகம பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 750 கிராம் ஐஸ் போதைப் பொருளும்  15 இலட்சத்து 20 000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர் போதைப்பொருள் கடத்தல் ஊடாகவே இந்த பணத்தை பெற்றுக் கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய , தெஹிவலை பகுதியில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் தலைமையிலான குழுவினராலே மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை பகுதியிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் , இதன்போது காரில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 43 கிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் 4 தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெல்லம்பிடி மற்றும் ஜம்பட்டாவீதி பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52