உண்மையை கண்டறியும் குழு அடுத்த மாதத்தில் உருவாக்கப்படும் என  அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், உண்மையை கண்டறியும் குழு தொடர்பான பொறிமுறையும் அடுத்த மாதம் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கான புதிய சட்ட ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவினால் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையின் பரிந்துரைகளுக்கு அமைய இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.