திருகோணமலை நகைக் கொள்ளையுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது

Published By: Vishnu

26 Feb, 2021 | 05:11 PM
image

பெப்ரவரி 08 ஆம் திகதி திருகோணமலையில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் இடம்பெற்ற 38 இலட்சம் ரூபா கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

திருகேணமலை பகுதியில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை நிலையமொன்றில் கடந்த 8 ஆம் திகதி , 38 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றதகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது திருக்கோணமலை - கோணேஸ்வரம் கடற்பகுதியில் படகொன்றில் வந்துள்ள கொள்ளையர்கள், தங்க நகைகளை கொள்ளையிட்டு மீண்டும் படகிலேயே தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந் நிலையில் தற்சமயம் இந்தச் சம்பவம் தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதன்போது திருகேணமலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே இந்த கொள்ளைத்திட்டத்தை திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் பல்வேறு குற்றச் செயற்பாடுகளுடன் தொடர்புக் கொண்டு தற்போது தலைமறைவாகியுள்ள 'ஐஸ் மஞ்சு' எனப்படும் சந்தேக நபரின் சகோதரர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அவரை கைதுசெய்துள்ள பொலிஸார் , அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் , வெளிநாட்டு துப்பாக்கி ஒன்றும் அதன் ஆறு தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை , சந்தேக நபர்களால் தப்பிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட படகின் உரிமையாளரை கைது செய்துள்ள பொலிஸார் , சந்தேகநபர்கள் பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் , கொள்ளையிடப்பட்ட தங்கநகைகளை மீட்பதற்காக பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56