நான் புத்தியற்றவர் அல்ல - நீதி அமைச்சர்

Published By: Digital Desk 3

26 Feb, 2021 | 10:33 AM
image

(செ.தேன்மொழி)

சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக தன்னால் புதிய சட்டங்களை உருவாக்க முடியாது என்றும் ,அது போன்ற கருத்துகளை தெரிவிக்கும் அளவுக்கு தான் புத்தியற்றவர் கிடையாது என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

நீதி அமைச்சில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

இலங்கையில் 2019 ஆம் ஆண்டின் இறுதிகாலப்பகுதில்  7 இலட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் விசாரணைகள்குட்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் உயிர்நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் 50 ஆயிரம் வழங்குகள் தொடர்பான விசாரணைகள் 20 வருடகாலமாக இடம்பெற்று வருகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளை பொருத்தமட்டில் ஒரு மில்லியன் மக்களுக்கு எந்தனை நீதிபதிகள் இருக்கவேண்டும் என்று சட்டவிதிகள் காணப்படுகின்றன. இலங்கையை பொருத்தமட்டில் அவ்வாறான நிலைமை இல்லாததுடன் , இங்கு 15 நீதிபதிகளே காணப்படுகின்றனர்.  இதனை மாற்றி அமைக்க வேண்டும். அதேவேளை நீதிமன்றங்களில் விசாரணைக்குட்படுத்தி வரும் வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழங்கு விசாரணைகளை கட்டுப்படுத்துவதற்காக தொழிநுட்பமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சிறையயிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல முடியாதவர்களை இணையவாயிலாக தொடர்புக் கொண்டு வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றது. இதேவேளை புதிய அரசியலமைப்பு திருத்தமொன்றை அமைப்பது தொடர்பிலும் தற்போது ஆராயப்பட்டு வருகின்றது. இதன்போது வணிக சட்டம், சிவில் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக விசேட நிபுணர்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடரில் என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்துத் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தினதேரரால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் தெரிவிக்கும் வகையிலேயே நான் அன்று கருத்து தெரிவித்திருந்தேன்.  இதன்போது ரத்தினதேரர் 'ஒரே நாடு -ஒரே சட்டம் என்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தேர்தல் பிரசாரமாகும்' என்று குறிப்பிட்டு , தனியார் சட்டங்களை மாற்றி அமைப்பது தொடர்பில் கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளிக்கும் முகமாகவே தனியார் சட்டங்கள் என்பது முஸ்லீம் இனத்துடன் மாத்திரம் தெராடர்புக்கொண்டதல்ல , நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கும் தனித்தனியான சட்டங்கள் உள்ளன. அவை அனைத்தையும் மாற்றி அமைப்பது என்றால் அதுதொடர்பில் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்று அவருக்கான பதிலை வழங்கியிருந்தேன்.

இத்தகைய கருத்தை தெரிவித்ததாக என்னை பலரும் விமர்சித்திருந்தனர். சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக என்னால் சட்டங்கள் உருவாக்க முடியாது. அவ்வாறான எண்ணத்தில் எந்தவித கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை. இதுத் தொடர்பில் பௌத்தமத தலைவர்களுக்கு பலமுறை தெளிவுப்படுத்தியுள்ளேன். இது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தவும் நான் தயாராகவே உள்ளேன். எந்தவொரு சட்டத்தை உருவாக்குவதென்றாலும் அதுத் தொடர்பில் அமைச்சரவையில் அனுமதிப் பெறவேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில் முஸ்லிம் சட்டவிதிகள் சிலவற்றில் திருத்தம் மேற்கொள்ள நாம் அமைச்சரவையில் அனுமதி பெற்றுக் கொண்டுள்ளோம்.அதற்கமைய முஸ்லிம் ஆண்களுக்கு நிகரான முஸ்லிம் பெண்களுக்கு சமவுரிமை வழங்கல் , 18 வயதுக்கு பின்னரே முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்யவேண்டும், பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணியகூடாது போன்ற திருத்தங்கள் அதில் உள்ளடங்குகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு நாட்டின்...

2024-03-28 14:20:44
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59