இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published By: Digital Desk 4

25 Feb, 2021 | 10:35 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் வைரஸானது மேல் மாகாணத்தில் மாத்திரமின்றி ஏனைய பகுதிகளிலும் வேகமாக பரவுகிறது. அதற்கமைய கடந்த சில வாரங்களாக மலையத்தின் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை காலை முதல் பொகவந்தலாவை சுகாதார சேவை பிரிவிற்குட்பட்ட செப்பல்டன் தோட்டத்தில் பி.எஸ். பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 81 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று இரவு 10.30 மணி மணி வரை 464 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 81 931 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 76 961 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 4289 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றையதினம் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 459 ஆக உயர்வடைந்துள்ளது.

அந்த வகையில் கடவத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதான பெண் ஒருவரும், வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 93 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின. 

பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண்னொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 24 ஆம் திகதி கொவிட் தொற்றுடன் இரத்தம் நஞ்சானமை , சிறுநீரக நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

கல்கிஸ்ஸையை சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 21 ஆம் திகதி கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் தீவிர நீரழிவு நோய் மற்றும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

கொட்டுகொட பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய ஆணொருவர் வடகொழும்பு போதனா வைத்தியசாலையில் கடந்த 23 ஆம் திகதி கொவிட் நிமோனியா நிலையால் உயிரிழந்துள்ளார்.

வத்தளையை சேர்ந்த 60 வயதுடைய ஆணொருவர் வடகொழும்பு போதனா வைத்தியசாலையில் கடந்த 24 ஆம் திகதி கொவிட் நிமோனியா நிலை மற்றும் தீவிர இதய நோயால் உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31