அனைத்து மக்களுக்கும் கொவிட் தடுப்பூசி கிடைக்கும் வரை அதனை ஏற்றிக்கொள்ளப்போவதில்லை - சஜித்

Published By: Digital Desk 4

25 Feb, 2021 | 10:38 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

22மில்லியன் மக்களுக்காகவும் கொவிட் தடுப்பூசி நாட்டுக்கு வரும் வரை நான் அதனை ஏற்றிக்கொள்ள மாட்டேன் என எதிர்க்கட்சி தலைர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தெஹிவளை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், நாட்டைப் பாதுகாப்பதற்கும் முன்நிற்பேன் என்று   நான் பலசந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கின்றேன்.

எனக்கு முன் நாட்டு மக்களுக்கு இடம் தருவேன் என்று மிக தெளிவாக சொன்னேன்.  அதனை நடைமுறைப்படும்வகையில் முதல் சந்தர்ப்பமாக கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் எனக்கு முதல் நாட்டு மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற தீர்மானத்தை நான் எடுத்திருக்கின்றேன்.

அதனால் 22 மில்லியன் மக்களுக்காகவும் இந்த தடுப்பூசிகள் அனைத்தும் இந்த நாட்டில் தரையிறங்கும் வரை தடுப்பூசி பெற நான் தயாராக இல்லை.  ஏனென்றால், தேர்தல் காலத்தில் மக்களுக்கு வளங்கிய வாக்குறுதியின் பிரகாரம், அனைத்து விடயங்களிலும் மக்களுக்கே முன்னுரிமை என்ற விடயத்தை உறுதிப்படுத்த இதுவே நல்ல சந்தர்ப்பம் என உறுதியாக நம்புகின்றேன்.

ஆனால் தேர்தல்கள் காலங்களில் நாட்டு மக்களுக்கே முன்னுரிமை வழங்குவதாக தேர்தல் மேடைகளில் பேசி மார்பை தட்டிக்கொண்டவர்கள், கொவிட் தடுப்பூசி விடயத்தில் மக்களை மறந்து செயற்படுகின்றனர். மக்களுக்கு முன்னர் தங்களுக்கு வழங்கப்படவேண்டும் என தெரிவித்து அதனை ஏற்றிக்கொண்டுள்ளனர்.

எனவே நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க பல நவீன, முற்போக்கான, முறையான மற்றும் வலுவான தீர்வுகள் எங்களிடம் உள்ளன.  சிக்கல்களைத் தீர்ப்பது எளிதான பணி அல்ல.  இது ஒரு கடினமான பணி.  ஆனால் கடினமான காரியங்களைச் செய்ய  சரியான தலைமை, சரியான ஆற்றல், சரியான திறன் கொண்ட நல்ல குழுவென்று இருக்க வேண்டும். அவை அனைத்தும் எங்களிடம் இருக்கின்றன.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது நாட்டிற்கும் மக்களுக்கும் முன்னால் புதிய சிந்தனைகள் மற்றும் யோசனைகள் நிறைந்த ஒரு முன்னோக்கி பயணத்தைக் கொண்ட கட்சியாகும். அந்த பயணத்தில் மக்களின் உண்மையான வெற்றியையும் நாட்டின் வெற்றியையும் உறுதிப்படுத்த நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11