நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சிறிய இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் 'அன்பிற்கினியாள்' படத்திற்கு வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குனர் கோகுல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'அன்பிற்கினியாள்'. இந்தப்படத்தில் நடிகர் அருண்பாண்டியன் அவரது மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் ஆகிய இருவரும் தந்தை மகளாக நடித்திருக்கிறார்கள்.
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஹெலன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் இது என்றாலும், தமிழ் ரசிகர்களுக்கு இயக்க சிறிய அளவில் மாற்றங்கள் செய்திருப்பதாக இயக்குனர் கோகுல் தெரிவித்திருக்கிறார். இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் இயக்குனர் கோகுல் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கிறார் என்பது முன்னோட்டத்தின் மூலம் தெரிய வருகிறது.
தமிழ் திரை உலகில் ராசியான மற்றும் நம்பிக்கையான விநியோகஸ்தர் என்ற பெயரை சம்பாதித்து இருக்கும் 'சக்தி பிலிம் பேக்டரி' சக்திவேலன் இந்தப் படத்தை மார்ச் மாதம் 5ஆம் திகதி அன்று தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இப்படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் வெளியாகி, பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.
'தும்பா' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை கீர்த்தி பாண்டியன், கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'அன்பிற்கினியாள்' படம் அவரது கலை உலக பயணத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
'அன்பிற்கினியாள்' படத்தைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி பாண்டியன் அறிமுக இயக்குனர் கிரி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் வினோத் கிஷன் உடன் இணைந்து நடித்து வருகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM