தமிழ் மொழியை நிராகரித்தால் தாம் மிகச்சிறந்த தேசியவாதிகளென பலர் நினைக்கின்றனர்- நிமல் சிறிபால

Published By: Digital Desk 3

25 Feb, 2021 | 05:38 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இன்று பெரும்பாலான தலைவர்கள் தாம் தேசியவாதிகள் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு தமிழ் மொழி உள்ளிட்ட ஏனைய மொழிகளை நிராகரித்து செயற்படுவதால் அவர்கள் தாம் மிகச்சிறந்த தேசியவாத தலைவர்கள் என நினைத்துக்கொண்டுள்ளனர் என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா சபையில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, முன்னாள் சபாநாயகர் வி.ஜே.மு லொக்குபண்டாவிற்கான அனுதாபப் பிரேரணை எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் அதில் உரையாற்றும் போதே இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

வி.ஜே.மு லொக்குபண்டார அவர்கள் இந்த நாட்டின் பாகுபாடு இல்லாத அதே வேளை சுதேசிய கொள்கைகளை ஊக்குவிக்கும் தலைவராக வாழ்ந்து காட்டினார்.

இன்று பலர் இனவாத கொள்கையில் இருந்துகொண்டு தனி சிங்கள கொள்கையில் இருந்தால் தாம் வீரர்கள் என நினைத்து செயற்படுகின்றனர்.

ஆங்கிலத்தை நிராகரிப்பதன் மூலமும் தமிழ் மொழி உள்ளிட்ட ஏனைய மொழிகளை நிராகரித்து செயற்படுவதால் அவர்கள் தாம் மிகச்சிறந்த தேசியவாத தலைவர்கள் என நினைத்துக்கொண்டுள்ளனர்.

ஆனால் வி.ஜே.மு லொக்குபண்டார அவர்கள் அவ்வாறு இல்லாது சகல மொழிகளிலும் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார்.

அதேபோல் இந்த நாட்டின் ஆயுர்வேத மருத்துவத்தை பரப்ப அவர் முக்கிய நடவடிக்கைகளை எடுத்தார். இலைக்கஞ்சி இன்று நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ளதென்றால் அதற்கான நடவடிக்கை எடுத்தவர் அவரேயாவார். சுற்றுலா தளங்களில் இன்று இலைக்கஞ்சி உள்ளதென்றால் அதற்கு அடித்தளமிட்டவர் அவரே.

அவர் சபாநாயகராக இருந்த காலத்தில் நானும் அவருடன் பல சர்வதேச கூட்டங்களில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்தர்ப்பங்களில் ஒருபோதும் இலங்கையின் கொள்கையை பிளவுபடுத்தவோ, அரசாங்கத்தை விட்டுக்கொடுக்கவோ அவர் முயற்சிக்கவில்லை. எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பேசிய நபர் அவர். அவர் ஒரு இலங்கையர் என்ற உணர்வுடன் செயற்பட்டார் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24