ஹங்குரன்கெத்த - தமுனமேய  பிரதேசத்தில் வயலொன்றுக்கு அருகில் இருந்து ஒருதொகை ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த ஆயுதங்கள் நேற்று (11) மாலை மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது  டி 56 ரக துப்பாக்கியின் 261 ரவைகள், வெடிப்பொருட்களின் மூன்று பாகங்கள் மற்றும் மெகசின்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைப்பற்றப்பட்ட ஆயுங்கள் தொடர்பான விசாரணையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.