தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 3,233  பேர் கைது

Published By: Gayathri

25 Feb, 2021 | 04:04 PM
image

(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

அதற்கமைய இன்று வியாழக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் தற்போது வரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 3,233 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறான கண்காணிப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

நாளை வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் பொதுமக்கள் வெளியிடங்களில் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். எவ்வாறிருப்பினும் தனிமைப்படுத்தல் விதிகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய புதன்கிழமை 2,583 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டது. அதற்கமைய இதுவரையில் 17, 914 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58