கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வர அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Published By: J.G.Stephan

25 Feb, 2021 | 10:59 AM
image

மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்தை நாட்டிற்கு எடுத்து வந்து உறவினர்களிடம் கையளிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், குறித்த சடலத்தை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான 972,847 ரூபாய்களை கடற்றொழில் அமைச்சினால் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சிற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், சடலங்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஒழுங்கு நடவடிக்கைகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொண்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் உயிரிழந்த கடற்றொழிலாளியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்களின் படகு, காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த படகு மாலைதீவு கடலோரப் பாதுகாப்பு படையினரிடம் சிக்கியது.

இதன்போது, உயிரிழந்த நிலையில் கடற்றொழிலாளர் ஒருவரின் சடலத்தை மாலைதீவு அதிகாரிகள் மீட்டிருந்தனர்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவத்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்கான செலவையும் கடற்றொழில் அமைச்சின் ஊடாக செலுத்துவதற்கு அறிவுறுத்தியமைக்கமைய குறித்த நிதி வெளிநாட்டு அலவல்கள் அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38