எதிர்பார்ப்புகளுக்கு முரணானதாகவே  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை - அஷோக அபேசிங்க

Published By: Digital Desk 3

25 Feb, 2021 | 09:28 AM
image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கை முழுமையற்றதாகும். பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட தரப்பினரின் எதிர்பார்ப்பிற்கு முரணாகவே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கை முழுமையற்றதாகும். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க ஆயர் சபை , கத்தோலிக்க மக்கள் என அனைவரும் எதிர்பார்த்ததை போன்றல்லாமல் இந்த அறிக்கை முற்றிலும் வேறுபட்டதாகவுள்ளது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களாகும். இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும்.

நாட்டை பாதுகாகக் கூடிய வீரர் என்று கருதியே 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தனர். ஆனால் தற்போது அவரிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மரங்களை வெட்டி சட்ட விரோதமாக காடழிப்பவர்களைக் கூட கைது செய்ய முடியாத அரசாங்கத்திற்கு எவ்வாறு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் ? எனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி நாட்டை பொறுப்பேற்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கையைக் கொண்டு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியையோ அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களையோ கைது செய்ய முடியாது. இது தொடர்பில் பேராயரும் விரைவில் அவரது நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10