கேள்விகள் சமர்ப்பித்து இரு மாதங்களாகின்ற போதிலும் இதுவரை பதிலில்லை - சபையில் சாணக்கியன் ஆதங்கம்

Published By: Digital Desk 4

25 Feb, 2021 | 06:43 AM
image

எனது கேள்விகளை சமர்ப்பித்து இரண்டு மாதங்களாகின்றன. இன்னும் பதில் கிடைக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு, அஸ்கிரிய, மல்வத்து மாநாயக்க பீடாதிபதிகள்  புனர்வாழ்வளிக்க வேண்டும் – இரா.சாணக்கியன் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற கேள்வி பதிலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், “சபாநாயகர் அவர்களே நான் பாராளுமன்றத்திற்கு வருகை தருவது மட்டக்களப்பிலிருந்து.  இதற்கான தூரம் 350 km ஆக உள்ளது. நான் எனது கேள்விகளை சமர்ப்பித்து இரண்டு மாதங்களாகின்றன. இன்னும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை.

நான் உங்களிடம் கேள்வி எழுப்பியது செப்டெம்பர் மாத காலப்பகுதியில் அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.  இவ்வாறான நிலைமை இருக்குமாயின் எங்களுக்கு உடன் தெரிவித்தால் நாங்கள் மட்டக்களப்பிலிருந்து பாராளுமன்றத்திற்கு வர வேண்டிய தேவை இருக்காது.

எங்களுக்கு பேசுவதற்கு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த விடயம் சுகாதாரத்துறை சம்மந்தமானது. முக்கியமாக கொவிட் 19 சம்மந்தமான விடயங்கள். செப்டெம்பர் மாதம் சுகாதாரத்துறை அமைச்சரிடம் நான் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க 3 வாரங்கள் கேட்டிருந்தார்.

இன்னும் அதற்கு பதிலளிக்கவில்லை. எங்களது கேள்விகளுக்கு பதிலளிக்காமையினாலேயே எமது உரிமைகள் உதாசீனம் செயப்படுவதினாலேயே நாங்கள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான (P2P ) போன்ற போராட்டங்களை முன்னெடுக்கவேண்டியுள்ளது.

ஆனால் இந்த போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பொலிஸார் தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். இதற்கான பதிலினை அரசாங்க அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களே அளிக்க வேண்டும்.

நாங்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க 2 வாரங்கள் கேட்டால் நாங்கள் பாராளுமன்றத்திற்கு வர வேண்டிய தேவை இல்லை.  நீங்கள் ஏன் எங்களுக்குப் பதிலளிக்க மறுக்கின்றீர்கள்? நாங்கள் கேட்பது மட்டக்களப்பு மாவட்டத்தின் சுகாதாரம் பற்றிய முக்கியமான கேள்விகள்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களே நான் கிலோ மீற்றர் தூரத்தினைக் கூறியது இதற்காக அல்ல. நான் குறிப்பிட வந்த விடயம் என்னவென்றால் சுகாதாரத்துறை சம்மந்தமான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பதினால் தான். முக்கியமான கேள்விகள் நெடுங்காலமாக இன்னும் பதிலளிக்கப்படாமலேயே உள்ளன.

அதற்காகவே நான் இந்தக் கேள்விகளை வினாவினேன். நான் பிரதமரிடமே அதிக கேள்விகளை வினாவினேன். ஏனெனில் அவரிடம் கேள்விகளை கேட்க முடியுமானதாக இருப்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே. அதனால் தான் நான் அதிக கேள்விகளை அவரிடம் எழுப்பினேன்.

நீங்கள் பல கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளீர்கள். அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் இன்னும் சுகாதாரம் சம்மந்தமாக எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

சுகாதாரம் சம்மந்தப்பட்ட விடயம் என்பதனால் இதற்கு மூன்று பேரை இதற்கு நியமிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.  அதன் போது கருத்து தெரிவித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் இருந்தால் ஊடகங்களில் என்னைப் பற்றி தவறான கருத்துக்களை முன்வைப்பார்கள். ஆகையினால் இவரது கேள்விகளுக்கு நான் பதிலளிக்கின்றேன்.“ எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22