5 இலட்சம் கொவிட் -19 தடுப்பூசிகளை நாளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு - சுதர்ஷனி 

Published By: Digital Desk 4

24 Feb, 2021 | 09:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)
5 இலட்சம் கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகள் நாளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் 2 இலட்சம் தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளப்படும். சிறந்த திட்டமிடலினால் கொவிட் வைரஸ் தொற்று தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கொவிட் வைரஸ் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பிரனாந்து புள்ளே தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் - வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்துள்ளது.பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் கடந்த வாரம் முதல் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 4 வீதமாக குறைவடைந்துள்ளது.

கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் கடந்த மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 128 மில்லியன் தடுப்பூசிகள் உலகளாவிய மட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 75 சதவீதமான தடுப்பூசிகள் 10 நாடுகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளன.

130 நாடுகளில் 2.5 பில்லியன் அளவிலான மக்களுக்கு இதுவரையில் கொவிட் வைரஸ் தடுப்பூசிகள் ஏதும் வழங்கப்படவில்லை.

இவ்வாறான பின்னணியில் இலங்கை கொவிட் வைரஸ் தடுப்பூசியை வெற்றிகரமாக பெற்றுக் கொண்டு முதற்தர சேவையாளர்களுக்கு சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டு மக்களுக்கும்  விசேடமாக கொழும்பு மற்றும்  கம்பஹா மாவட்ட மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இந்திய அரசாங்கத்தினால் 5 இலட்ச தடுப்பூசிகள் நிவாரண அடிப்படையில் கிடைக்கப்பெற்றன.

மார்ச் மாதம் முதல்வாரத்தில் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்தோம். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமையவே ஜனவரி மாதம் முதல் தடுப்பூசிகளை வழங்கினோம்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் வைரஸ் தொற்று தீவிரமாக பரவியதாலும், அதிக மரணங்கள் பதிவானதாலும் இவ்விரு மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

30 தொடக்கம் 60 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதால் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டது. 60 வயதுக்கும்  மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.

எதிர்வரும் மார்ச் மாதம்  முதல் வாரத்தில் சுமார் இரண்டு இலட்சம் தடுப்பூசிகளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35