எல்.பி.எல். போட்டித் தொடரில் ஆட்ட நிர்ணய முயற்சி: விசாரணைகளை புறக்கணிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் 

Published By: Digital Desk 4

24 Feb, 2021 | 07:35 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)
ஹம்பாந்தோட்டையில் நடந்து முடிந்த எல்.பி.எல். எனும் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய நடவடிக்கைகளுக்கு வீரர்களை தூண்டியதாக கூறப்படும் விவகாரத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகல துறைவீரர் சசித்ர சேனநாயக்க, விளையாட்டு குற்றங்களை தடுப்பதற்கான சிறப்பு பிரிவு பொலிஸாரின் விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். 

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அவரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற 3 தடவைகள் அழைக்கப்பட்டும் அவர் விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. அதன்படி இன்றைய தினம் சசித்ர சேனாநாயக்க, மூன்றாவது தடவையாக குறித்த பொலிஸ் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். சசித்ர சேனாநாயக்கவின் இணக்கப்பாட்டுடனேயே, இன்றைய தினம் வருமாறு அவருக்கு திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் இன்று நண்பகல் ஆகும் போது, விசாரணைக்கு வருகை தர முடியாது என சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்துள்ளார்.

எல்.பி.எல். தொடரின் போது கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை வைகிங் ஆகிய அணிகளின் வீரர்கள் இருவரை, ஆட்ட நிர்ணயத்துக்கு சசித்ர சேனாநாயக்க அழைத்ததாக, குறித்த வீரர்கள் சர்வதேச கிரிக்கட் சபைக்கு சான்றுகளுடன் முறையிட்டுள்ளனர்.

 இந்நிலையிலேயே அம்முறைப்பாடுகள் விளையாட்டு குற்றங்கள் குறித்து விசாரணை செய்யும் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு, சர்வதேச கிரிக்கட் சபையினால் அனுப்பட்டுள்ளன. இது குறித்த ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவுபெற்று, சட்ட மா அதிபரின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே, தற்போது, சசித்ர சேனாநாயக்கவின் வாக்கு மூலத்தை பதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படியே முதலில் கடந்த 15 ஆம் திகதியும், அதன் பின்னர் 17 ஆம் திகதியும் சசித்ர சேனநாயக்க  வாக்கு மூலம் பெற அழைக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் அந்த திகதிகளில் ஆஜராக முடியாது எனவும் வேறுதினம் ஒன்றினையும் கோரியிருந்த நிலையில், கடந்த 17 ஆம் திகதி, சசித்ரவின் இணக்கப்பாட்டுடன் இன்று 24 ஆம் திகதி ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் அவர் ஆஜராகாத நிலையில், இது குறித்து எடுக்க முடியுமான அடுத்த கட்டம் தொடர்பில் விசாரணையாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35