(ஆர்.வி.கே.)

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை செய்யப்பட்டு அவ்வாறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லையென மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்படுள்ளமை தொடர்பில் வீரகேசரி இணையத்தளத்திற்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

முன்னாள் போராளிகளின் மரணம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நாங்கள் இது சம்பந்தமாக ஆய்வினை செய்ய ஆரம்பித்துள்ளோம்.

குறிப்பாக தமிழினி அவர்களின் மரணத்திலும் சந்தேகம் எழுத்தது அதற்கு முன்பும் பெண் போராளி ஒருவர் தமிழினி போன்று புற்றுநோய்க்குள்ளாகி இறந்துள்ளார். 

இப்பொழுது மேலும் பல போராளிகள் இறப்பதற்கான காரணம் விச ஊசி ஏற்றப்பட்டமை என்று கூறப்படுகின்றது.

விச ஊசி ஏற்றப்பட்ட நிலையில் தான் முன்னாள் போராளிகள் இறக்கின்றார்கள் என்றால் அது குறித்து விசாரணை செய்யப்பட்டு அவ்வாறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும் என்பதில் எங்களிடம் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை..

இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றிருந்தால் இச் சம்பவங்கள் போர்விதிமுறைகள் ,மனித உரிமைகள், ஜனநாயகம் போன்றவற்றை மீறுகின்ற செயல் ஆகும். போராளிகளுக்கு உண்மையிலையே விச ஊசி ஏற்றப்படிருந்தால் அதற்கான நிவாரணத்தையும் போராளிகளுக்கு பெற்று கொடுக்கவேண்டும் அவர் மேலும் தெரிவித்தார்.