ஜெனிவாவில் இலங்கை குறித்து இன்று விவாதம்; பச்லெட் அறிக்கையை வெளியிடுவார்

Published By: Digital Desk 3

24 Feb, 2021 | 02:52 PM
image

ரொபட் அன்டனி 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர்  திங்கட்கிழமை ஜெனிவாவில்   ஆரம்பமாகி ஆரம்ப அமர்வுகள் நடைபெற்றுவருகின்ற நிலையில்  இன்று    இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. 

இலங்கை தொடர்பான விவாதத்தின் ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.  அதாவது இலங்கை எவ்வாறு ஐ,நா, பரிந்துரைகளை அமுல்படுத்தியது என்பது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உத்தியோகபூர்வமாக தாக்கல் செய்யவிருக்கிறார்.

அதன் பின்னர் ஏனைய நாடுகள் இலங்கை தொடர்பாக உரையாற்றுவதற்கு ஏற்பாடாகியிருக்கின்றது.   குறிப்பாக அமெரிக்கா,கனடா, பிரிட்டன், ஜேர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் இதன்போது  இலங்கை தொடர்பாக உரையாற்றும் என்றும் தமது நிலைப்பாடுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளிவந்திருக்கின்றது.  அதில் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றார்.   

இலங்கையானது உள்ளக ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதில் தோல்வி அடைந்ததுள்ளதாகவும்   ஐ நா மனித உரிமை பேரவை உறுப்பினர்கள் சர்வதேச தெரிவை நாடவேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.  முக்கியமாக  இலங்கை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பிரேரணையை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாகவும் அவர் பரிந்துரைகளை அந்த அறிக்கையில் முன்வைத்திருந்தார்.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் அந்த அறிக்கையை முற்றாக நிராகரித்திருந்தது.   வெளிவிவகார அமைச்சர் அது தொடர்பாக கடுமையான பதிலை வழங்கியிருந்தார். அத்துடன் பதில் அறிககை ஒன்றும் ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்டது.   அதேபோன்று சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித்த கோஹனவும்   ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்க இவ்வாறான  அறிக்கை வெளியிடுவதற்கு எவ்விதமான உரிமையும் அதிகாரமும் இல்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே இன்று அந்த அறிக்கையின் சாரம்சத்தை ஐ.நா.  மனித உரிமை ஆணையாளர் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.  அதன் பின்னர் இலங்கை சார்பில் ஜெனிவா மனித உரிமைப் பேரவைக்கான தூதுவர்  உரையாற்றுவார் என்றும் தொடர்ந்து உறுப்பு நாடுகளும் தமது நிலைப்பாடுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில் மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் இலங்கை தொடர்பாக பிரிட்டன் ஜேர்மனி, கனடா உள்ளிட்ட ஆறு நாடுகள் ஒரு புதிய பிரேரணையை தாக்கல் செய்யவுள்ளன.   அது தொடர்பாக பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் நேற்று முன்தினம் ஜெனிவாவில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். 

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக அவதானிக்கும் வகையில் புதிய பிரேரணை கொண்டுவரப்படும் என்று பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.  அது மட்டுமன்றி இலங்கையும்  இம்முறை ஒரு பிரேரணையை ஜெனிவா பேரவையிலா தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   இந்த விடயம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.  எனினும் ஒரு பிரேரணையை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அந்த பிரேரணையை தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இரண்டு பிரேரணைகள் இம்முறை இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   இதேவேளை   இலங்கை இவ்வாறு பிரிட்டன் ஜேர்மனி கனடா உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை முற்றுமுழுதாக எதிர்க்கும் என்று தெரிவிக்கப்படுகின்ற நிலையில் அது வாக்கெடுப்புக்கு செல்லும். 

 அவ்வாறு பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறும் பட்சத்தில் அதில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.  குறிப்பாக உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.  இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சீனா இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றது.   இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு  ஜெனிவாவில் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி இலங்கை கடிதம் ஒன்றையும் அனுப்பி இருக்கின்றது.

அதுமட்டுமின்றி ஜெனிவாவில் இந்தியா தமக்கு ஆதரவு வழங்கும் என்று நம்பிக்கை வைத்திருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன  கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.   

கடந்த  2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைப் பேரவை நிறைவேற்றப்பட்டு இலங்கையினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட
30-1  என்ற பிரேரணை பின்னர்  2017 ஆம் ஆண்டில் 34-1 என்றும் பின்னர் 2019 ஆம் ஆண்டில்  40-1 என்றும் நீடிக்கப்பட்டது. அந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னைய நல்லாட்சி அரசாஙகம் அனுசரணை வழங்கியது. ஆனால் 2019 ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம்  2020 ஆம் ஆண்டு   அனுசரணையை மீளப்பெற்றது.  அந்த வகையிலேயே இம்முறை  புதிய பிரேரணை கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10