நானுஓயா எடின்புரோ தோட்டத்தில் தொழிலாளர்கள் ஆர்பாட்டம்

Published By: Robert

14 Dec, 2015 | 01:19 PM
image

நானுஓயா எடின்புரோ தோட்டத்தில் 300 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை 08 மணிமுதல் 10 மணி வரை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்டத்தில் இயங்கிவந்த தேயிலை தொழிற்சாலை கடந்த 03 மாதங்களுக்கு முன்பு தோட்ட நிர்வாகத்தால் இயந்திரங்களை திருத்துவதாக கூறி தற்காலிகமாக தொழிற்சாலை மூடப்படும் என தொழிலாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

ஆனால் 03 மாதங்கள் கடந்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தற்போது தோட்ட நிர்வாக அதிகாரிகளிடம் தொழிலாளர்கள் கேட்டபோது அதற்கு பணம் இல்லையென தெரிவிப்பதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தோட்டத்தில் நல்ல வருமானத்தினை தரக்கூடிய தேயிலை மலைகள் தோட்ட நிர்வாகத்தால் முறையாக பராமரிக்கப்படாமல் கைவிட்டுள்ளதாகவும் இத்தேயிலை மலைகளை துப்பறவு செய்வதற்கு கம்பனியிடம் பணம் இல்லை இதன் காரனமாகவே துப்பறவு செய்யமுடியாத நிலை இருப்பதாக தோட்ட நிர்வாகம் தெரிவிப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்ட நிர்வாகத்தால் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்கபடுவதில்லை எனவும் தோட்டத்தில் உள்ள பொதுமக்களின் சுகாதார விடயங்களை முறையாக செய்து கொடுப்பதில்லையெனவும் தெரிவித்தே இவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். 

தொழிற்சாலையை உடனடியாக திறக்கப்படாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுப்பதாக இவர்கள் கோஷங்கள் மூலம் தெரிவித்தனர். இவ் ஆர்பாட்டத்தில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31