நரி தப்பியோட்டம் ; பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் : மட்டக்களப்பில் பதற்றம் (காணொளி இணைப்பு)

Published By: Priyatharshan

12 Aug, 2016 | 10:09 AM
image

(சசி)

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக திராய்மடு சுவிஸ் கிராம  மக்கள் நேற்று இரவு 8 மணியிலிருந்து பெரும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதால் அப்பகுதியில் பதற்றநிலை உருவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சுனாமியில் தாய் தந்தையரை இழந்த திராய் மடு சுவிஸ் கிராமத்தில் வசிக்கும் சிறுமியொருவரின் வீட்டுக்கு முன்பாக மது அருந்திக் கொண்டிருந்த நரியென்று அழைக்கப்படும் குணசேனவை அவ்விடத்தை விட்டுச்செல்லுமாறு குறித்த சிறுமியின் சகோதரன் தெரிவித்ததால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக நரியால் சகோதரன் தாக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பம் ஒருவாரத்திற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து கோபமடைந்த  பிரதேச மக்கள் ஒன்றிணைந்து நரி என்று அழைக்கப்படும் குணசேன  மீது  தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு  இலக்கான நரி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட மறுநாள் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

வைத்தியசாலையைவிட்டு தப்பிச்சென்ற நரி வீதியால் சென்றவர்களின் கழுத்தில் வாளை வைத்து   மிரட்டியுள்ளார். கோபமடைந்த பிரதேச வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து குறித்த சம்பவம் தெடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் .

இதையடுத்து சம்பந்தபட்ட நரி என்பவரும் நரியினால்  தாக்கப்பட் ட  6 பேரும் விசாரணைகளின் பின் பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்டனர் .

இதையடுத்து சிறிது நேரத்தின் பின் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நரி தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆத்திரமடைந்த பொது மக்கள் பாதுகாப்பினை வழங்க வேண்டிய பொலிசார் எவ்வாறு குறித்த நபரை தப்பிக்கவிட முடியும் என கோரி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் நேற்று இரவு 8 மணி முதல் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த மாகாணசபை உறுப்பினர் இரா .துரைரெட்ணம், இந்திராகுமார், ஆகியோரால் அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுசென்றதையடுத்து, அரசாங்க அதிபர்  பொலிஸாரிடம் நிலைமை தொடர்பாக ஆராய உத்தரவிட்டுள்ளார் .

நரியினால் தாக்கப் பட் ட  6 பேரும் விடுதலை  செய்யப்பட்டுள்ளதுடன் 24 மணி நேரத்துக்குள் நரியை கைது செய்வதாக பொலிஸ் அதிகாரி கீர்த்திரெட்ண தெரிவித்துள்ளார் .

நரி என்பவர் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளவர் என்பது முதல் கட் ட  விசாரணைகளில் இருந்து  தெரியவந்துள்ளது. நரி என்ற  வர்த்தகர் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதில் பொதுமக்கள் உறுதியாகவுள்ளனர்.

இதேவேளை, குறித்த வர்த்தகரை கைதுசெய்யும் நோக்கில் பெருமளவான பொலிஸார் திராய்மடு பகுதியில் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50