ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் சந்தேகம் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு

Published By: Digital Desk 4

24 Feb, 2021 | 05:47 AM
image

ஐ.நா மனிதவுரிமை பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னராக ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் சந்தேகம் என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சந்தேகம் தொடர்பில்  பின்னணியில் யார் என்பதை தெளிவாகவும், வெளிப்படையாகவும் நாம் முன்னர் கூறியிருந்தோம் இப்போது அந்த விடையம் அம்பலமாகியுள்ளது.

சிங்கள அரசால் தமிழினம் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே நீதி கிடைக்கும் என்பதில் உறுதியாக செயற்பட்ட பிரதிநிதிகள் பலர் திட்டமிட்டு  சிவகரன்,சுமந்திரன் , கஜேந்திரகுமார் போன்றோரால் புறமொதுக்கப்பட்டனர்.

பல மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், கட்சிகள், யாழ் பல்கலைக்கழகம்,கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், மத தலைவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள்,கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வீதியில் நீதிக்காக நின்று  கதறிக்கொண்டு இருக்கின்றவர்களின் பிரதிநிதிகள் கூட இங்கே திட்டமிட்டு  புறமொதுக்கப்பட்டனர்.

இவர்கள் யாவரும் சர்வதேச விசாரணையை வலுயுறுத்துபவர்கள். இதில் சிலர் ஜெனிவா சென்று சாட்சியம் வழங்கியவர்கள் அனைவருமே திட்டமிட்டு புறமொதுக்கப்பட்டனர்.

இவ்வாறானவர்களை புறமொதிக்கியதன் பின்னணியில் சிவகரன், சுமந்திரன், கஜேந்திரகுமார் போன்றோர்கள் உள்ளனர்.

பிரித்தானியாவில் சுமார் இருநூறுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் இணைந்து பிரித்தானிய பிரதமர் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச விசாரணையை துரிதமாக வலியுறுத்தி கடிதங்கள் அனுப்பப்பட்டன அதுவே மிகவும் பலமான  கோரிக்கையாகும் .

ஆனால் இங்கு என்ன நடந்தது இனவழிப்பு நடந்த வடக்கு கிழக்கு தமிழரின் பூர்வீக தேசத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் உள்ளிட்ட  பல மக்கள் பிரதிநிதிகள் இருந்த போதும்  நீதி கோரல் விடையத்தில் அவர்களை ஒருங்கிணைக்கவும் இல்லை கையொப்பம் வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்ட வில்லை இதை கழுத்தறுப்பு என மட்டும் கூற முடியாது சிங்கள தேசத்தை சர்வதேசத்தில் தப்ப வைப்பதற்கான சதி என்றே கூட முடியும்.

சர்வதேச சமூகத்தை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் தொடர்பில்  ஆராய்ந்தால் அவர்களுக்கு நீதியை கோருபவர்கள் யாரென்றால் மூன்று கட்சியும் இரண்டு பொது அமைப்பும்  இரண்டு தனி நபரும் இவ்வாறான சூழ்நிலையால் தான் இதுவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை என்ற ஒரு சொல் கூட சர்வதேச சமூகத்தின் அறிக்கையில் காணப்படவில்லை காரணம் என்ன? 

இங்கு உள்ள ஏனைய பொது அமைப்புகள் கட்சி தலைவர்கள் விரும்பவில்லை என்ற விடையத்ததை சர்வதேச சமூகம் ஆராய்ந்ததன் நிமிர்த்தம் தமிழருக்கான சாதகமான அறிக்கை வரவில்லை இந்த யதார்த்தத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

உறுப்பு நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பின்னர் பல்வேறு பட்ட விமர்சனங்கள் வந்த பின்னர் சொன்னார்கள்  அனுப்பப்பட்ட கடிதத்துக்கு பலம் வழங்க முன்னர் கையொப்பம் இடாதவர்களை ஒருங்கிணைத்து அதில் கையொப்பம் வைத்து அனுப்புவதாக கஜேந்திரகுமாரால் பொய் கூறப்பட்டது. 35 நாட்கள் கடந்தும் அது நடத்தப்பட வில்லை என்றால் இவர்களின் கொள்கைக்கு சரிவு ஏற்பட்டதா?

சர்வதேச சமூகத்திடம் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லாத ஒரு அறிக்கைதான் வரப்பட்டுள்ளது. இதன் பின்னர் நாங்கள் இவர்களின்  நிலைமையை அறிவதற்கு 24 ஆம் திகதி பொது அமைப்புக்களும் தமிழ்த்தேசியக் கட்சிகள் எல்லோருக்குமாக சேர்த்து ஒரு சந்திப்பை ஏற்படுத்துவதற்காக ஊடகங்கள் ஊடாக அறிவித்தோம் இந்த தீர்மானம் தொடக்கத்திலையே கஜேந்திர குமாரால் தோற்கடிக்கப்பட்டது. 

எமது தொலைபேசிக்கு தொடர்பு கொண்ட கஜேந்திரகுமார்  அறிக்கை தயாரிக்க பொத்துவில் சுவாமி கொழும்பு வரும்படி நேற்று கூறிவிட்டார் என அப்பட்டமான பொய்யை கூறி ஒற்றுமை தன்மைக்கு கழங்கம் எற்படுத்தும் வகையில் செயற்பட்டார்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச விசாரணையை தங்கள்  கட்சி மட்டும் தான் வலியுறுத்திவருகின்றது என வாயால் வடை சுடும் இவர்கள் சர்வதேச விசாரணையை ஒரு அங்குலம் ஏனும்  முன்னெடுத்தார்களா? அல்லது இனவழிப்பு தொடர்பில் ஒரு ஆவணம் கூட இவர்களிடம் இருக்கின்றதா?

சர்வதேசத்தில் இலங்கையை காப்பாற்ற தீவிர முயற்சி செய்யும் இவர்களை உண்மையில் மக்கள் இனம் காணவேண்டும்.நாம் எமது முன்னைய சந்திப்புகளில் மிகவும் திடமாக உளவுத்துறைகளின் பின்னணி என குறிப்பிட்டு இருந்தோம். இவ்வளவு நாட்களின் பின்னர் நீங்கள் இப்போது அதன் நிதர்சனத்தை ஊடகங்கள் வாயிலாக எமக்கு பின்னால் அறையவில்லை , முகத்தில் ஓங்கி அறைந்துள்ளார்கள் என அறிந்துள்ளீர்கள் .

இனியாவது நாம்,  கனவுகளில் இருந்து அகல வேண்டும். எமக்கான போராட்ட வெளிகளை, நாம் உருவாக்க வேண்டும். மக்களைப் போராட்டத்தின் மையமாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47