ரஞ்சன் ராமநாயக்க சிறையில் மலசலகூடங்களை சுத்தம் செய்கிறார்: ஹரீன் சபையில் வேதனை 

Published By: J.G.Stephan

23 Feb, 2021 | 05:38 PM
image

( ஆர்.யசி)
இன்று ரஞ்சன் ராமநாயகவை சிறையிலுள்ள மலசலகூடங்களை சுத்தம் செய்யவே பணித்துள்ளனர். மிக மோசமாக ரஞ்சன் ராமநாயக நடத்தப்படுகின்றார். அவருக்கு அரசாங்கம் அநியாயம் செய்கின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார். 

இன்று நாம் எதிர்க்கட்சியில் உள்ளோம். ஆனால் நாளை நாம் ஆட்சிக்கு வந்ததும் நாமும் இவ்வாறே செயற்பட்டால், இன்று ஆளும் கட்சியில் உள்ள எத்தனை பேர் சிறைக்கு செல்லவேண்டி வரும் என சிந்தித்துப்பாருங்கள் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, ரஞ்சன் ராமநாயக எம்.பியை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்திய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த போதே ஹரின் பெர்னாண்டோ எம்.பி இதனை கூறினார்.  

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக நீதிமன்றத்தை அவமதித்ததை நாம் நியாயப்படுத்தவில்லை. அதேபோல் இவர்கள் அனைவரும் கள்ளர்கள் என அவர் கூறினாலும் யார் என நேரடியாக எவரையும் சுட்டிக்காட்டவில்லை. அதுமட்டுமல்ல எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சிறையில் அடைக்கப்படுவதை நாம் விரும்பவில்லை. கொலை செய்திருந்தால், கொள்ளையில் ஈடுபட்டிருந்தால், தவறு செய்திருந்தால் அவர்களை தண்டிக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை 

எனவே ரஞ்சன் ராமநாயகவிற்கு நியாயத்தை பெற்றுக்கொடுங்கள். அவரை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தவில்லை. அவருக்கான பாராளுமன்ற வாய்ப்பை பெற்றுக்கொடுங்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04