நாட்டின் உள்ளக பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்ல வேண்டியதில்லை - மாகல்கந்தே சுதந்த தேரர்

Published By: Digital Desk 4

24 Feb, 2021 | 05:37 AM
image

(நா.தனுஜா)

நாட்டில் மூன்று தசாப்தகால யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாகவும் சர்வதேச விசாரணையின் ஊடாக இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பலர் கூறுகின்றார்கள்.

உள்ளக பிரச்சினையொன்று தொடர்பில் சர்வதேசத்தை நாடவிருப்பதாகக் கூறுவதன் ஊடாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் அதனையே செய்கின்றார்.

நாட்டின் பிரச்சினைகளை சர்வதேச மட்டத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டிய அவசியமில்லை என்று சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் சுட்டிக்காட்டினார்.

Articles Tagged Under: மாகல்கந்தே சுதந்த தேரர் | Virakesari.lk

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையின் உள்ளடக்கங்கள் பெருமளவிற்கு திரிபடைந்திருக்கின்றன என்று கருதுகின்றோம்.

அவ்வறிக்கையின் ஊடாக தேசிய அமைப்புக்களைத் தண்டிக்கும் திட்டமிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் அதனை உடனடியாகக் கைவிடவேண்டும்.

அதுமாத்திரமன்றி இவ்வறிக்கை தயாரிக்கப்பட்ட போது அதில் அரசியல் தலையீடுகள் எவையேனும் காணப்பட்டதா என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும்.

இந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்துமாறும், இவ்விடயத்தில் நீதி நிலைநாட்டப்படாவிட்டால் சர்வதேசத்தை நாடவுள்ளதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கூறுகின்றார்.

நாட்டில் 30 வருடகாலமாகப் போர் இடம்பெற்றது. அது முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட போது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும் இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பலர் கூறுகின்றார்கள்.

தற்போது அதனையே கார்டினலும் செய்ய முற்படுகின்றார். நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்லவேண்டிய அவசியமில்லை.

கடந்த காலங்களில் நாம் விழிப்புடன் செயற்பட்ட போதும் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் எச்சரித்த போதும் கார்டினல் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பவர் போன்று செயற்பட்டார்.

நாம் இனங்களுக்கு இடையில் தேவையற்ற பிரச்சினைகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவதற்கு முற்படுவதாகவும் பலர் கூறினார்கள் என்று சுட்டிக்காட்டினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44