ஹட்டனில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் ஹட்டனில் இன்று  இடம்பெற்றுள்ளது. சலங்கந்தையிலிருந்து ஹட்டன் நோக்கிச்சென்ற தனியார் பஸ்ஸொன்றுடன் ஹட்டனிலிருந்து டிக்கோயா நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டி மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில்  முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்த நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து  தொடர்பில் அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.