இன்று வருகிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்  : முஸ்லிம் தலைவர்களை சந்திக்க கோரிக்கை : கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் ஏற்பாடு

23 Feb, 2021 | 06:55 AM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை வரும் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான சந்திப்பிற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனுமதி கோரியுள்ளனர். 

இதேவேளை பாகிஸ்தான் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் கட்டாய தகனம் செய்யப்படுகின்றமையை எதிர்த்தும் , நிபுணர் குழுவின் பரிந்துரைகளை உடன் அமுல்படுத்துமாறும் வலியுறுத்தி இன்று செவ்வாய்கிழமை மாலை 3 மணிக்கு பலவந்த தகனத்திற்கு எதிரான தேசிய அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இதில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இரு நாட்கள்; உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று செவ்வாய்கிழமை மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

பாகிஸ்தான் வெளியுறவுகள் அமைச்சர் மக்தூம் ஷா மெஹ்மூத் குரேஷி, பிரதமரின் வணிக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இலங்கைக்கான விஜயத்தில் இணைந்துக் கொண்டுள்ளதுடன் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடவுள்ளனர்.

இதேவேளை நாளை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவைவிற்கு இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது. 

அதன் பின்னர் முற்பகல் 11.30 க்கு ஷங்ரில்லா ஹோட்டலில் நடைபெறவுள்ள வணிக மற்றும் முதலீட்டு சம்மேளனத்திலும் பாக்கிஸ்தான் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார்.

நண்பகல் 12.30 க்கு சபாநாயகர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மதிய போசனத்தில் கலந்து கொள்வார். மேலும் நாவல கிரிமண்டல மாவத்தையில் உயர்தரத்திலான விளையாட்டு துறைசார் மத்திய நிலையமொன்றை திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51