இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 450 ஆக அதிகரிப்பு

Published By: Digital Desk 4

22 Feb, 2021 | 09:56 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் தொரோனா மரணங்களின் எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது.

இன்றையதினம் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று திங்கட்கிழமை இரவு 10  மணி வரை 490  புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 80 489 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 75 110 பேர் குணமடைந்துள்ளதோடு , 4667 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை நேற்று ஞாயிறுக்கிழமை மேலும் 10 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது.

கொலன்னாவையை சேர்ந்த 74 வயதுடைய ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 21 ஆம் திகதி கொவிட் நிமோனியா, ஈரல் நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தையை சேர்ந்த 82 வயதுடைய பெண்ணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கடந்த 21 ஆம் திகதி கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 16 ஆம் திகதி கொவிட் தொற்றுடன் இரத்தம் நஞ்சானமை , இதய நோய், தீவிர நீரிழிவு நோய் என்பவற்றால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய பெண்னொருவர் கடந்த 16 ஆம் திகதி கொவிட் தொற்றுடன் இரத்தம் நஞ்சானமை, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் என்பவற்றால் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

பிபில பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆணொருவர் கண்டி வைத்தியசாலையில் கடந்த 19 ஆம் திகதி மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு, கொவிட் தொற்றால் சுவாச தொகுதியில் ஏற்பட்ட தொற்று நிலையால் உயிரிழந்துள்ளார்.

குருதலாவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் கடந்த 20 ஆம் திகதி கொவிட் நிமோனியா, இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் தீவிர நீரிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

புறக்கோட்டையை சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் கடந்த 19 ஆம் திகதி மூச்சிழுப்பு , தீவிர நீரழிவு நோய் என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

குடாகல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய ஆணொருவர் குருணாகல் போதனா வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி கொவிட் தொற்று , இரத்தம் நஞ்சானமை என்பவற்றால் உயிரிழந்துள்ளார்.

இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 90 வயதுடைய ஆணாருவர் பிம்புர ஆதார வைத்தியசாலையில் கடந்த 20 ஆம் திகதி கொவிட் நிமோனியா நிலையால் உயிரிழந்துள்ளார்.

ஹட்டனை சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவர் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் கடந்த 20 ஆம் திகதி கொவிட் தொற்று , தீவிர நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவற்றால் உயிரிழந்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35