மோதரை பகுதியில் கடந்த மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்படும் போது குறித்த நபர்களிடமிருந்து கைதுப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இரண்டு முச்சக்கர வண்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதாளக்குழுக்கள் என்று கருதப்படும் தெமட்டகொட சமிந்த மற்றும் ஆமி சம்பத் ஆகிய குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலே குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு கிரான்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலைசெய்யப்பட்ட நபரொருவரே குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கு இழக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.