தமிழ் கட்சிகளை இணைத்து தமிழ்த் தேசிய பேரவையை உருவாக்க தீர்மானம்  

Published By: Digital Desk 4

21 Feb, 2021 | 09:36 PM
image

அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய பேரவை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி இன்று இடம்பெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  அவர் இதனை தெரிவித்தார்.

இக்  கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டிருந்த அதே வேளை கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொண்டிருக்கவில்லை.

 இக் கூட்டம் தொடர்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய 10 கட்சிகள் இன்று சந்தித்து தற்போது  இருக்கக்கூடிய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் வந்திருந்த முதலாவது வரைவு தொடர்பாகவும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல விடயங்களை ஆராய்ந்து இருந்தோம்.

அதில் முக்கியமாக இரண்டு விடயங்கள் பேசப்பட்டு இருக்கின்றது.

 எதிர்வரும் 26ஆம் திகதி வவுனியாவில் தமிழ் தேசிய பரப்பில் இருக்கக்கூடிய தமிழ் கட்சிகளும் அதேபோல கிறிஸ்தவ, இந்து பெரியார்களும் முக்கியமாக வடகிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள் அதேபோல தமிழ் இந்து பரப்பில் இருக்கக்கூடிய பல்வேறுபட்ட ஆதின முதல்வர்களும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து பல தரப்பினரும் இணைந்து எதிர்வரும் 26ஆம் திகதி வவுனியாவில் பேச உள்ளோம்.

அதில் முக்கியமாக தமிழ் மக்களினுடைய அரசியல் கோரிக்கைகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக இந்த முதலாவது வரைபில்  சரியான முறையில் பிரதிபலிக்கவில்லை . அது தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற என்ற விடயமாக இங்கு சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆகவே வரைவு என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரு சரியான தீர்வினை பெற்றுக் கொள்ளக்கூடியதாக  இருக்கவேண்டும் அந்த விடயங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை தமிழ்தேசிய பரப்பில் இருக்கக்கூடிய பல கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு முக்கியமான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இருந்தார்கள். 

ஆனால் அந்த முதலாவது  வரைபில் அவை உள்ளடக்கப்படவில்லை எனவே 26 ஆம் திகதி அடுத்த கட்டமாக இதற்கு என்ன செய்வது என்பது பற்றி ஆராய்வதற்காக ஒன்று கூடி பேச உள்ளோம். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக் கூறுதல் தீர்வு என்பது முக்கியமானது என்பதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் இது சர்வதேச அரசியலுக்கு அப்பால் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனித உரிமைகள் ,பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வுகள் பொறுப்புக்கூறல் போன்றவற்றை சர்வதேச சமூகம் உண்மையான உணர்ந்து இந்த அடிப்படையில் தீர்மானம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.

அடுத்த கட்டமாக தற்போது நாங்கள் 10 கட்சிகள் கூடி பேசிக் கொண்டிருக்கின்றோம் தமிழர் தரப்பில் இருக்க கூடிய ஏனைய கட்சிகள் கூட இணையலாம்.

நாங்கள் இந்த பத்து கட்சிகளையும் மிக விரைவாக ஒரு தமிழ்த் தேசிய பேரவையாக உருவாக்குவதற்கான கோரிக்கை இப்பொழுதும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது அந்த கோரிக்கை இங்கு வந்திருந்த அனைத்து கட்சியினராலும் பேசப்பட்டது.

எனவே இந்த விடயம் தொடா்பில் பேசப்பட இருக்கின்றது அத்தோடு வருகிற 28 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மீண்டும் கூடி இந்த தமிழ் தேசிய பேரவை உருவாக்குவது பற்றிய இறுதி தீர்மானம் எடுக்கப்பட உள்ளது ஆகவே அதனடிப்படையில் வரக்கூடிய 28 ஆம் திகதி ஒரு தமிழ் தேசிய பேரவையினை உருவாக்கி அந்த பேரவை என்பது தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டக்கூடிய சாத்தியப்பாடான முடிவுகளை எடுப்பதற்காக செயல்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19