புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சு.க ஏமாற்றமடைந்தது: பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச  

Published By: J.G.Stephan

20 Feb, 2021 | 07:06 PM
image

(எம்.மனோசித்ரா)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளுக்காக நீதி நிலைநாட்டப்படவில்லை. தேர்தலுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ள எந்தவொரு விடயமும் பிரதான கட்சியால் நிறைவேற்றப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் 12 பங்காளி கட்சிகள் உள்ளன. ஆனால் பிரதான கட்சி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்கின்றமையும் தொடர்புகளைப் பேணுகின்றமை என்பன மிக பலவீனமாகவே காணப்படுகிறது. உள்ளக தொடர்புகள் முழுமையாக அற்றுப் போயுள்ளன.

தேர்தலுக்கு முன்னர் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள எந்தவொரு விடயமும் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக தேசிய சொத்துக்கள் விற்கப்பட மாட்டாது என்று கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டது. அதே போன்று ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டது.

நாட்டின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்களை வழங்கும் போது , அதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் தீர்மானிக்கப்பட்டு தகுதிகளினடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது உறவினர்கள், நண்பர்களுக்கே முக்கிய நியமனங்கள் வழங்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

அவை மாத்திமின்றி பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுவதையும் காண்கின்றோம். இடங்கள் பல கொள்ளையடிக்கப்படுகின்றன. சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறான நிலையில் பங்காளி கட்சிகளுக்கான நீதி , நியாயம் நிலைநாட்டப்படவில்லை. குறைபாடுகளை கண்டறிந்து அவ்வப்போது தீர்வகளை வழங்காவிட்டால் நிலைமை மோசமடையும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35