பிரதமர் இம்ரான் கானின் வருகை இரு தரப்பு உறவை வலுப்படுத்தும்: பிரதமர் மஹிந்த

Published By: J.G.Stephan

20 Feb, 2021 | 07:00 PM
image

(எம்.மனோசித்ரா)
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையானது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும். அத்தோடு இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பரஸ்பர கூட்டு முயற்சிகளுக்கும் இந்த விஜயம் வழிவகுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவொன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் மேலும், 'இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவருடன் விஜயம் செய்யும் குழுவினரையும் வரவேற்க எதிர்பார்த்துள்ளோம். பாகிஸ்தான் பிரதமரின் இந்த விஜயமானது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும். அத்தோடு இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பரஸ்பர கூட்டு முயற்சிகளுக்கும் வழிவகுக்கும் என்று குறிப்பிட்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இம்முறை ஏற்பட கூடிய சவால்களை எதிர்கொள்ள இஸ்லாமிய நாடுகளின் ஆதரவை இலங்கை பெற்றுக்கொள்ள இந்த விஜயம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. குறிப்பாக ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான புதியதொரு தீர்மானம் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அதனை எதிர்க்கும் வகையிலும் இலங்கையை ஆதரிக்கும் வகையிலும் நட்பு நாடுகளுடன் இலங்கை தற்போது கலந்துரையாடி வருகின்றது. மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அந்தஸ்துள்ள நாடு  என்ற வகையில் பாகிஸ்தானின் ஒத்துழைப்புகள் இலங்கைக்கு பெரிதும் பயன் தரும் என பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயம் குறித்து குறிப்பிடப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41