சம்பள பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பு செய்யும் நோக்கிலேயே கம்பனிகள் இவ்வாறு செயற்படுகின்றன: இராதாகிருஸ்ணன்

Published By: J.G.Stephan

20 Feb, 2021 | 06:53 PM
image

அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாமலேயே பெருந்தோட்ட கம்பனிகள் 19.02.2021 அன்று சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் அட்டனில் இன்று (20.02.2021)இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “சம்பள பேச்சுவார்த்தையை இழத்தடிப்பு செய்யும் நோக்கில் கம்பனிகள் இவ்வாறு செயற்படகூடும். அதாவது பேச்சுவார்த்தையை இழுத்தடிக்க கம்பனிகள் இவ்வாறு சூட்சமமான வேலைகளில் ஈடுபடுகின்றன. அதாவது அரசாங்கத்தின் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் இவ்வாறு 1000 கொடுப்பதை தவிர்க்க இவ்வாறு செயற்படலாம். பெருந்தோட்டங்களை இந்தியாவின் அதானி கம்பனிக்கு விற்பது என்பது வெறும் கட்டுக்கதையாகவே நான் கருதுகின்றேன். நான் அரசாங்கத்துடன் இணைவதாக கூறுவோர் அது தொடர்பான பேச்சுவார்த்தை எப்போது என கூறினால் அதற்கு பதிலளிப்பேன்.

20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தொடர்பிலும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இங்கு கருத்து தெரிவித்தார்.

“அரவிந்த குமார் தொடர்பில் மக்களின் தீர்மானத்திற்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்படும். நாம் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், இந்தியாவை பகைத்துக் கொண்டு ஏனைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது ஆபத்தானது. ஆகவே நண்பனை பகைத்துக்கொண்டு செயற்படுவதை மாற்றிக்கொள்ள வேண்டும்.” என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47