பிரிவினைவாதம் தூண்டப்படுவதாலேயே தேசிய பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறை - சரத் வீரசேகர

Published By: Digital Desk 2

20 Feb, 2021 | 10:08 AM
image

( இராஜதுரை ஹஷான் )

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு நாட்டில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் தனி ஈழ இலக்கு சர்வதேச அளவில் வியாபித்துள்ளது.

தனி ஈழ கொள்கையினையுடைய அரசியல்வாதிகள் இன்றும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள். 

இதன் காரணமாகவே தேசிய பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறை கொண்டுள்ளோம்  என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

30 வருட கால சிவில் யுத்தம் பாரிய போராட்டத்திற்கு மத்தியில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டுமாயின் தேசிய புலனாய்வு பிரிவு பலம் கொண்டதாக காணப்பட வேண்டும்.

ஒரு சம்பவம் இடம்பெற்ற பின்னர் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது புலனாய்வு பிரிவினரது செயற்பாடால்ல.

தேசிய புலனாய்வு பிரிவு சிறந்த முறையில் காணப்பட்டதால் 30 வருட கால யுத்தம் குறுகிய காலத்தில் நிறைவுக்கொண்டு வரப்பட்டது.

யுத்தம் முடிவடைந்த விட்டது என்ற காரணத்தினால் புலனாய்வு பிரிவின் செயற்பாட்டை அப்போதைய அரசாங்கம்  குறைத்து மதிப்பிடவில்லை.

யுத்த சூழல் இடம் பெற்ற நாட்டில் எந்நேரத்திலும் புலனாய்வு பிரிவு அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பது கடுமையான முறையில் பின்பற்றப்பட்டது. இதனால் 2009 தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையில் நாட்டில் தீவிரவாத செயற்பாடுகள் ஏதும் இடம்பெறவில்லை.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய பாதுகாப்பு  பலவீனப்படுத்தப்பட்டது. குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டன.

இவ்வாறான செயற்பாட்டை அடிப்படைவாதிகள் சாதகமாக பயன்படுத்தி ஏப்ரல் 21 தினத்தில் குண்டுத்தாக்குதலை முன்னெடுத்தனர்.இச்சம்பவம் குறித்த விசாரணை நடவடிக்கை தற்போது பகுதியளவில் நிறைவுப் பெற்றுள்ளது.

யுத்த காலத்தில் தேசிய பாதுகாப்பு எந்தளவிற்கு வினைத்திறனாக செயற்பட்டதோ அந்தளவிற்கு தற்போது புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்கு புலனாய்வு பிரிவின் பங்களிப்பு பிரதானமானதாகும். வடக்கில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கன்னி வெடி அகற்றல் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு சில பகுதிகளில் பெருமளவிலான ஆயுதங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை புலனாய்வு பிரிவினரது தகவல்களுக்கு அமைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு நாட்டில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் புலிகளின் தனி ஈழ இலக்கினை இன்றும் புலம் பெயர் தமிழர்அமைப்புக்களும், அரசியல்வாதிகளும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்து செல்கிறார்கள்.

இதற்கு அவர்கள் வாழும் நாடுகளில் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டிருந்தாலும் அவர்களின் இலக்கு சர்வதேச அளவில் வியாபித்துள்ளது.

தனி ஈழ கொள்கையினை கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றையாட்சி முறைமைக்கு முரணான கருத்துக்களை குறிப்பிட்டு இளைஞர்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

இதன் காரணமாகவே தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம்.அழிக்கப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பினை மீளுருவாக்குவதற்கு   செயற்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56