பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த வாரமும்  கொவிட் -19 தடுப்பூசி 

Published By: Digital Desk 4

19 Feb, 2021 | 05:37 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

எஸ்ட்ராசெனகா கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த வாரத்தில் மூன்று நாட்கள் தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கை தேசிய கொவிட் செயலணி ஏற்பாடு செய்திருப்பதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 23 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை முதல் 25ஆம் திகதிவியாழக்கிழமை வரையான காலப்பகுதியில் முற்பகல் 8.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தவாரம் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் கொழும்புக்கு வருவதால் அடுத்த வாரமும் தொடர்ந்து தடுப்பூசி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 16ஆம் திகதிமுதல் 19ஆம் திகதிவரை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24