போதைப்பொருள், 3 இலட்சம் பணத்துடன் இருவர் கைது

Published By: Digital Desk 2

19 Feb, 2021 | 05:09 PM
image

(செ.தேன்மொழி)

மாகொல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஊடாக சேமிக்கப்பட்ட மூன்று இலட்சத்துக்கும் அதிகமான பணத்துடன் சந்தேக நபர்களிருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

மாகொல பகுதியில் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப் பொருள் மற்றும் பணத்தொகையுடன் சந்தேக நபர்களிருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேக நபர்களை சோதனைக்குட்படுத்தியுள்ள விசேட அதிரடிப்படையினர், அவர்களிடமிருந்து ஒரு கிலோ 185 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 3 இலட்சத்து  52 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தற்போது சிறைவைக்கப்பட்டுள்ள கைதியொருவரின் திட்டத்திற்கமையவே இந்த போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்களிருவரும் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப் பொருள் பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப் பொருள் பிரிவினர் சந்தேக நபர்களை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த எதிர்பார்த்துள்ளதுடன் , மேலுத விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10