ரியோ ஒலிம்பிக்கின் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.

ரியோ ஒலிம்பிக்கின் 5 ஆவது நாளான நேற்று ஒலிம்பிக் குதிரைச்சவாரி இடம்பெறும் பகுதியில் உள்ள குதிரை தொழுவத்திலிருந்து  துப்பாக்கி ரவையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி ரவையை அங்குள்ள ஊழியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் பிரேசில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கையில், குறித்த தோட்டாவானது சக்தி குறைந்த துப்பாக்கி தோட்டா என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட நபரையும் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த சனிக்கிழமை ஒலிம்பிக் குதிரைச்சவாரி மையத்தின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இடம்பெற்ற பகுதியில் துப்பாக்கி ரவையொன்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.