கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை அரசியலாக்க வேண்டாம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Published By: Digital Desk 2

19 Feb, 2021 | 03:11 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை  அரசியல் மயப்படுத்த ஆளுந்தரப்பும் எதிர்தரப்பும் முயற்சிக்கக் கூடாது. இந்த செயற்பாட்டில் அரசாங்கம் தோல்வியடைந்தால் எதிர்கட்சி உள்ளிட்ட முழு நாடும் தோல்வியடையும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,கொவிட் கட்டுப்படுத்தலில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்று தொடர்ச்சியாக குற்றஞ்சுமத்திக் கொண்டிருப்பதை எதிர்க்கட்சி நிறுத்திக் கொள்ள வேண்டும். 

இந்த விடயத்தில் அரசாங்கம் தோல்வியடைந்தால் எதிர்க்கட்சி உள்ளடங்களாக முழு நாடுமே தோல்வியடைய வேண்டும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

குறைகளை கூறி பிரசாரம் செய்து கொண்டிருக்காமல் அவற்றை நிவர்த்தி செய்து பயணிக்க எதிர்க்கட்சி ஒத்துழைக்க வேண்டும்.ஆளுந்தரப்பிலும் இவ்விடயம் தொடர்பில் குறைபாடுகள் உள்ளன.

 எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் அவை தொடர்பில் அநாவசிய நம்பிக்கையை அவர்கள் ஏற்படுத்துகின்றனர்.

மே மாதத்திற்குள் நாட்டிலுள்ள சகலருக்கும் கொவிட் தடுப்பூசிகளை வழங்கி கொரோனாவை முற்றாக ஒழிப்போம் என்று அமைச்சரொருவர் கூறியுள்ளார். அவ்வாறு கூற முடியுமா ? இதனை செய்ய முடியாமல் போனால் மக்களின் நம்பிக்கை முழுவதும் சீரழிந்துவிடும்.

ஆளுந்தரப்பும் எதிர் தரப்பும் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை அரசியல் மயப்படுத்த முற்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.

 இந்த செயற்பாடுகள் ஆரம்பமாகி இரு தினங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் , தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கான வழிகாட்டல்கள் இன்னமும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டர்ல் மாத்திரமே...

2024-03-29 12:20:15
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30