சீனப் பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யும் நிலை இலங்கையர்களுக்கு ஏற்படும் - காரணம் கூறுகிறார் ரணில்

19 Feb, 2021 | 07:00 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கைக்கு சீனா வழங்கும் யுவானால் வேறு பிரச்சினை தோற்றம் பெறும்.  இதனால்  சீனப் பொருட்களை மாத்திரமே எமக்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்வதில் அரசாங்கம் கடும் சவால்களையே காண்கின்றது. 

சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலும் 1500 யுவான்களை வழங்கவே சீனா முன்வந்துள்ளது. 

சீன யுவான்களை இலங்கை பெற்றுக்கொண்டாலும் டொலரிலேயே மீள் செலுத்த வேண்டும். 

இதன் போது திறைசேரியின் இருப்பு வீதம் அதிக புள்ளியில் காணப்பட்டாலும் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணி இருப்பாக இலங்கையிடம் காணப்படாது. 

இதனால்  சீனப் பொருட்களை மாத்திரமே எமக்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். 

அதற்கும் தற்போதுள்ள சீன பொருட்களுக்கான கொள்வனவு கட்டுப்பாட்டை அகற்ற வேண்டும். 

அவ்வாறு செய்தால் ஏனைய நாடுகளுடனான பொருளாதார கொள்கைகளிலும் உறவுகளிலும் பாதுப்பு ஏற்படும். இது நிச்சயம் வேறு ஒரு பிரச்சினையை உருவாக்கும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

கொழும்பு – 3 , 5 ஆம் ஒழுங்கையில் உள்ள ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில்  கட்சி உறுப்பினர்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30