ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதிலில்லை - விசேட பேச்சுக்கு தயாராகும் அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் 

Published By: Digital Desk 4

19 Feb, 2021 | 06:34 AM
image

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கை  குறித்து நாளை துறைமுக தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளோம்.

மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானத்தை கைவிடுமாறு ஜனாதிபதிக்கு விடுத்துள்ள கோரிக்கைக்கு இதுவரையில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.

Image result for மேற்கு முனையம் virakesari

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாக்க முன்னெடுத்த போராட்டத்தில் வெற்றி பெற்றோம். துறைமுக தொழிற்சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிது.

இந்திய நிறுவனத்துக்கு கிழக்கு முனையத்துக்கு பதிலாக மேற்கு முனையத்தை வழங்க வேண்டிய தேவை கிடையாது. கிழக்கு முனைய விவகாரத்தில் அரசாங்கம் செயற்பட்ட விதம் மக்களின் எதிர்பார்ப்புக்குள் முரணானது என்பதை  சுட்டிக்காட்டினோம்.

42 வருட கால பின்னணியை கொண்டுள்ள துறைமுக சேவையில் பல உரிமங்கள் அந்நியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பல விடயங்களை சாதிக்க முடிந்தாலும் தேசிய மட்டத்தில் அதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கிழக்கு முனையத்தை தேசிய பொறியியலாளர்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை கூட அரசாங்கம் தாமதாமாகியே ஏற்றுக் கொண்டது.

மேற்கு முனையத்தின் 95 சதவீத உரிமத்தை இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பெயர் குறிப்பிடும்  நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வெறுக்கத்தக்கது.

இத்தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். மேற்கு முனையத்தை தேசிய மட்டத்தில் அபிவிருத்தி செய்வது குறித்து அவதானம் செலுத்துதல் அவசியமாகும்.

தேசிய வளங்களை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். அதனை பாதுகாக்கும் நோக்கில் துறைமுக தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த பேச்சுவார்த்தை நாளை இடம் பெறவுள்ளது. 23 தொழிற்சங்கத்தினரை உள்ளடக்கி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட எதிர்பார்த்துள்ளோம்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை கைவிட வேண்டும் என சுட்டிக்காட்டி கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்தோம். இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01