லைம் நோய் என்ற பாதிப்பை கண்டறிய புதிய பரிசோதனை

Published By: Digital Desk 4

18 Feb, 2021 | 08:15 PM
image

இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் பயனுள்ள பொழுதுபோக்கு என்ற போர்வையில் மலையேற்றம், அடர் காட்டில் பயணம் என சாகசங்களில் ஈடுபடுகிறார்கள். இத்தகையப் பயணங்களை மேற்கொண்டு திரும்பும்போது அவர்கள் லைம் நோய் எனப்படும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். 

இதனை தொடக்க நிலையில் கண்டறிய தற்போது புதிய வடிவிலான பரிசோதனை அறிமுகமாகி இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பொரிரேலியா பர்க்தார்பெர்ரி என்ற பாக்டீரியா மூலம் பரவும் நோய்த்தொற்று தான் லைம் நோய். இத்தகைய நோய் தொற்றால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகிறார்கள். இத்தகைய நோய் தொற்றிற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடக்க நிலையில் தோல் சிவந்துவிடும். சிலருக்கு அந்த பகுதியில் தோல் தடித்துவிடும். இத்தகைய நோய் தொற்று ஏற்பட்டவர்களில் பத்து சதவீதத்தினருக்கு சொரியாஸிஸ் எனப்படும் சொறி ஏற்படக்கூடும். இதனைத் தொடக்க நிலையில் கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்திவிடலாம். 

இத்தகைய பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருந்தால் கடுமையான சோர்வு கழுத்துவலி, காய்ச்சல், முக வாதம், தொடர் காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் உண்டாகும். கோளாறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம். இவற்றின் பாதிப்பை உறுதி செய்ய தற்போது புதிய  வகையினதான பரிசோதனை முறை அறிமுகமாகியிருக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக இத்தகைய பாதிப்பை உறுதிப்படுத்த ரத்த பரிசோதனையை மேற் கொள்வார்கள். தற்போது காகிதத்தாலான செயற்கை பட்டையொன்றின் மூலம் இதன் பாதிப்பை தொடக்க நிலையிலேயே அறிந்துகொள்ளலாம். அதன் பிறகு சிகிச்சை எடுத்து இதிலிருந்து முழுமையாக குணமடையலாம்.

டொக்டர் பாக்யராஜ்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36